கேப்டன் ஆஃப் தி ஷிப் கே.எஸ்.ரவிக்குமார் 66..! இவரை பற்றி ஒரு சீக்ரெட்..!
1958ம் ஆண்டு மே 30ம் தேதி திருவள்ளூரில் பிறந்தவர் கே.எஸ்.ரவிக்குமார்., பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ரங்கராஜ் உட்பட பலருடன் உதவி இயக்குநராக இருந்துள்ளார். அதன் பின் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இடம் பெற்றுள்ளார்.
1990ம் ஆண்டு புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின் சேரன் பாண்டியன் படத்தை இயக்கி வசூல் சாதனை படைத்தோடு. யார் இந்த கே.எஸ்.ரவிக்குமார் என பலரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
அதனை தொடந்து 3 ஆண்டில் புத்தம் புதுப்பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்யம், சூரியன் சந்திரன், புருஷ லட்சணம், சக்திவேல் போன்ற படங்களை இயக்கினார்.
எத்தனை படங்கள் இயக்கினாலும் ஒரு பேர் சொல்லும் படம் என கேட்டால்.., ஒரு படமா நான் இயக்கும் அனைத்து படங்களும் என் பேர் சொல்லும் படம் என சொல்லும் அளவிற்கு இருக்கும் படங்கள் தான் இவை.
நடிகர் சிவாஜி கணேஷன், ரஜினிகாந்த், செளந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த படம் தான் “படையப்பா”.
அதில் வரும் வசனங்களாகட்டும், கேரக்டர்கள் என பலரும் இன்று வரை ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும்.
மண்ணின் பெருமையை சொல்லும் விதமாகவும்.., இன்று வரை அனைவரையும் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் படமாக எடுக்கப்பட்ட படம் தான் “நாட்டாமை”..
குறிப்பாக அதில் வரும் டீச்சரை பலராலும் மறக்க முடியாது.. அதில் வரும் காமெடி வசனங்கள் கூட இன்று வரை பல மீம்ஸ்களில் போட பட்டு வருகிறது..
80ஸ், மற்றும் 90ஸ் களுக்கு மட்டுமல்ல 2கே கிட்ஸ் களுக்கு என் படம் என்றால் பிரியம் என சொல்லும் அளவிற்கு எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் “கூகுள் கூட்டப்பா”
இந்த படத்தை 2கே கிட்ஸ்கள் மட்டுமின்றி, தற்போதைய குழந்தைகளும் பார்த்து ரசிக்கும் அளவிற்கு எடுக்கப்பட்ட ஒரு படம் என சொல்லலாம்.
நடிகர் சரத்குமார், பிக் பாஸ் ஆரவ், சமுத்திரக்கனி, கவுதம் மேனன், சித்தாரா, உட்பட்ட பலரின் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் தான் “ஹிட் லிஸ்ட்” இந்த படத்தையும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
திருவள்ளூரில் பிறந்து வளர்ந்த கே.எஸ். ரவிக்குமார் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநராக முன்னேறியுள்ளார். பல ஹிட் படங்கள் கொடுத்து அதில் சம்பாதித்த பணத்தை வைத்து சென்னையில் பல்வேறு இடங்களில் அவருக்கென்று பங்களா வீடுக்கள் உள்ளது என சொல்லலாம். தற்போது இரண்டே முக்கால் ஏக்கரில் கப்பல் போல வீடு கட்டி வசித்து வருகிறார்.
ஹேப்பி பர்த்டே கே.எஸ். ரவிக்குமார் :
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மட்டுமின்றி 80ஸ்களின் வில்லனாகவும், 90ஸ் களின் இயக்குனராகவும், 2கே கிட்ஸ் களின் அப்பாவாகவும் நடித்து நம்மை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு ரசிகர்கள் சார்பாகவும். மதிமுகம் குடும்பத்தினர் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..