பேன் பொடுகு தொல்லையில் இருந்து மீள முடியவில்லையா..? தீர்வு இதோ
மனித உடலில் ஏற்படும் பிரச்னைகளில் பெரும் பிரச்சனை. தலையில் எற்படும் பேன், பொடுகு பிரச்னை..,
இதை சுலபமாகவே சரி செய்ய முடியும். அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்க்கலாம்.
தலைக்கு குளியல் : பொடுகு தொல்லை உள்ளவர்கள், கட்டாயம் வாரத்தில் மூன்று நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் தலையில் உள்ள எண்ணெய் பசபசப்பு குறைக்கப்பட்டு, பொடுகு வராமல் தடுக்கும்.
க்ரீன் டீ : சமையலில் பயன்படுத்தாத க்ரீன் டீயில், புதினா எண்ணெய், சிறிதளவு வெள்ளை வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதை ஒரு வெள்ளை துணியில் எடுத்து தலைக்கு மசாஜ் செய்யவும். பின் சலஃப்ட் இல்லாத ஷாம்பூவால் தலையை அலச வேண்டும். இது அரிப்பை குறைக்கும்.
எலும்பிச்சை : எலும்பிச்சை பழத்தின் சாற்றில் இரண்டு ஸ்பூன் எடுத்து, தலையில் தேய்த்து, மசாஜ் செய்ய வேண்டும்.
20 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு கப் தண்ணீரில் எலும்பிச்சை பழசாறை கலந்து தலைக்கு குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து செய்தால். பொடுகு தொல்லை கட்டுக்குள் வரும்.