சுயமரியாதைக்கு எதிராக செயல்பட முடியாது..!! பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி..!!
மும்பையின் உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹித் பி டியோ.., விசாரணையின் போது திறந்த நீதிமன்றத்தில் இருந்து பதவி விலகுவதாகா அறிவித்தியுள்ளார். இவரின் இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஒரு உயர்நீதி மன்றத்தின் நீதிபதி பதவி விலகினாலோ அல்லது பல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டி இருக்கும் ஏனென்றால் அந்த மாதிரியான சமையங்களில் அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்த பின்னரே மரியாதையுடன் வழி அனுப்பி வைப்பார்கள்.
இந்நிலையில் நாக்பூர் பெஞ்சில் உள்ள உயர்நீதி மன்றத்தில் அனைத்து நீதிபதிகளும் இருக்கும் பொழுதே.., நீதிபதி “ரோஹித் பி டியோ” தனது ராஜினாமாவை அறிவித்திருக்கிறார். ஒருவரின் ராஜினாமாவை இப்படி அனைவரின் முன்னும் அறிவிப்பது இதுவே முதல் முறையாகும்.
நீங்கள் அனைவரும் கடினமாக உழைத்தவர்கள்.., பதவியை விட்டு விலகும் பொழுது அதற்காக பாராட்டு விழா வைத்து நேரம் கடத்த நான் விரும்பவில்லை என்றும் நீங்கள் நீதிக்காக போராட வேண்டும். சில நீதிக்கு எதிராக என்னை செயல்பட சொன்னார்கள் அது என் சுயமரியாதையை இழந்து செயல்படுவதற்கு சமம்.., எனவே நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.., மேலும் இதுபற்றி நான் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை என கூறி பதவியை ராஜினாமா செய்துள்ளார். நீதிபதி “ரோஹித்பிடியோ”.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..