இந்த ரூல்ஸ் ப்ஃபளோ பண்ண மட்டும் தான் தேர்தலில் நிக்க முடியுமா..?
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரிஸ்வர்னா தேர்தலின் போது வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் வேட்புமனு தாக்கலின் போது எத்தனை பேர் வரவேண்டும் என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆனிமேரிஸ்வர்னா, அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், சிதம்பரம், குன்னம், கடலூர், காட்டு மன்னார்கோவில், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 1709 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 7,49,623 ஆண் வாக்காளர்களும் 7,61,206 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 86 வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்தி 10 ஆயிரத்து 915 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொண்டு செல்பவர்களை கண்காணிக்க 24 மணிநேரமும் பறக்கும் படையினர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதம்பரம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம் ஆகியவை தயார்நிலையில் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அதிகாரிகள் மற்றும் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் குறித்த புகார்கள் மற்றும் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கவும் மற்றும் தேர்தல் சம்பந்தமான சந்தேகங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய 1800 42 59 76 9 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வாக்காளர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..