தளபதியின் தளபதி இப்படி செய்யலாமா..? பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி புஸ்ஸி ஆனந்திடம் கேள்வி..?
விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலபொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று இரவு உடல்நல குறைவு காரணமாக பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..
இந்த தகவலை கேட்டதும் அவரை பார்ப்பதற்காக பாண்டிச்சேரி முதல்வர் ரங்காசாமி இன்று அதிகாலை புஸ்ஸி ஆனந்த் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளார்.., அப்போது பேசிய அவர்.
லியோ படத்தின் வெற்றி விழாவிற்காக இரண்டு நாட்கள் உறங்காமல் வேலை பார்த்தால் உடல்நலம் குறைவு ஏற்பட்டு நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..,
பின் இன்று அதிகாலை 3மணி அளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்..,
இன்று காலை 7 மணி அளவில்.., பாண்டிசேரி முதல்வர் ரங்கசாமி அவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார் அப்போது, தளபதியின் தளபதியே இப்படி செய்யலாமா.., நீங்களே இப்படி உடல்நலம் சரியில்லாமல் போனால் எப்படி என கேட்டு ஆறுதல் கூறியுள்ளார்..