தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அதற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கியுள்ளது. இந்த முகாமை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்ப்பதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மின் துறை அலுவலகத்தில் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை அதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
2,811 மின் வாரிய பிரிவுகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதற்கு இடையில் இருக்கும் பண்டிகை நாட்களை தவிர மற்ற அணைத்து நாட்களிலும் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் மேலும் இந்த முகாம்கள் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும் என்று ஆதார் எண்ணை இணைக்க ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. இந்த முகாம்களை தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்