விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் தேதி..? சத்திய பிரதா சாஹு வெளியிட்ட அப்டேட்..!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்கப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்ததையடுத்து விக்ரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த தகவல் தேர்தல் ஆணையத்திற்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலோடு விக்ரவாண்டிக்கு இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.