புரோபோஸ் செய்த பாட்னர்..! டக்குனு ஓகே சொன்ன அமலாபால்..!! வைரலாகும் நியூஸ்..!!
இன்று தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் அமலாபாலுக்கு திரைபிரபலங்கள் நண்பர்கள் உறவினர்கள் என பலரும் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்..,
சிந்துசமவெளி படத்திலிருந்து ஆடை படம் வரை அமலாபாலின் படத்தில் சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை. சில ஆண்டுகளாக படவாய்ப்பு இல்லாமல் இருந்த அமலாபால் தற்போது வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் மறுபடியும் பார்முக்குள் வந்துள்ளார்.
சினிமாவுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே விஜய், தனுஷ், அரவிந்தசாமி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
பின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்தார். விவாகரத்திற்கு பின் நடிப்பில் ஆர்வம் காட்டிய அமலாபாலுக்கு ஆரம்பத்தில் படவாய்ப்பு சரிவர அமையாததால் மன அழுத்தத்திற்கு ஆளானார்.
பின் நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு பார்ட்டி என வரம்பு மீறி தனது பெயரை கெடுத்து கொன்றார். தொடர்ந்து கேடாவர் படத்தில் நடித்த அமலாபால் அந்த படம் ஓடிடியில் வெளியாகி பாராட்டை பெற்றது.
பிரபல மலையாள எழுத்தாளர் பெஞ்சமின் எழுதிய நாவலை மையமாக கொண்ட கதையில் மலையாளத்தில் “ஆடு ஜீவிதம்” என்ற படத்தில் பிரித்விராஜ்க்கு மனைவியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் லிப் லாக் கட்சியில் நடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நிர்வாணமாகவே நடித்துவிட்டேன் இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல என கூலாக பதில் அளித்து இருந்தார்.
இன்று ஆண் நண்பருடன் பிறந்தநாள் கொண்டாட சென்றுள்ளார் ஆனால் சப்ரைஸ் கொடுக்கும் விதமாக அமலாபாலுக்கு அவரின் ஆண் நண்பர் ஜகத்தேசாய் புரோபோஸ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.., அதற்கு அமலாபாலும் ஓகே சொல்ல விரைவில் இருவருக்கும் திருமணம் என அறிவித்துள்ளனர்..
ஜகத் தேசாய் வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவில்.., “என் ஜிப்சி ராணி ஓகே சொல்லிட்டா” என #Weddingbells இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே என பதிவிட்டு பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவையும் பதிவிட்டுள்ளார்..