இளைஞரின் உடலை புதைத்து மாந்திரீக பூஜை…!! மர்ம ஆசாமியால் அச்சத்தில் உறைந்த கிராமம்…!!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த இருனாப்பட்டு கிராமத்தில் எகிலேரி என்ற நீரோடை உள்ளது. இந்த நிலையில் ஆண்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இவருக்கு சொந்தமாக எகிலேரி நீரோடையின் அருகே தென்னந்தோப்பிலான நிலம் உள்ளது.
இவர் அடிக்கடி தங்களுடைய நிலத்திற்கு சென்று வருவது வழக்கம் இந்த நிலையில் வழக்கம்போல கடந்த 5ஆம் தேதி தன்னுடைய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த எகிலேரி நீரோடையில் சந்தேகத்துக்குரிய வகையில் பூஜை சாமான்களும் அதேபோல எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம்,பூ, தேங்காய், உள்ளிட்ட பொருட்களை வைத்து மர்ம நபர்கள் யாரோ மர்ம பூஜை செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இங்கு பள்ளம் தோண்டி ஏதோ உடலை புதைத்து வைத்தது போல் அடையாளங்களும் தென்பட்டன இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மண்ணில் புதைந்திருப்பது என்னவென்று தெரியாமல் பீதி அடைந்திருந்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் காரணமாக திருப்பத்தூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பூஜை செய்த இடத்தைத் தோண்டி பார்த்தனர் அப்போது அதில் துணி மற்றும் ஒரு இளைஞரின் புகைப்படத்தை வைத்து மாந்திரீக பூஜை செய்துள்ளனர்.
மேலும் அந்தப் இளைஞரின் புகைப்படத்தின் பின்னால் கோவிந்தராஜ் என்பவருக்கு கட்டு போடப்பட்டுள்ளது. கை, கால், முடி, ஆகிய அனைத்திற்கும் கட்டு போடப்பட்டுள்ளது. என அதில் எழுதி வைத்து பூஜை செய்துள்ளனர். இந்த பூஜைகள் செய்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நபர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..