“அண்ணன் நான் இறங்கி வரவா” தவெக மாநாடு ஏற்பாடுகள்..!! தலைவர் விஜய் வேண்டுகோள்..!!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது.., அதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். அதை தொடர்ந்து கட்சி தொடங்கி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் கட்சியின் கொடியும், கட்சியின் பூவும் வெளியிடப்பட்டு தற்போது இந்த மாதம் 27ம் தேதி முதல் மாநாடும் நடத்தப்படவுள்ளது..
இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் தங்களுடைய சின்னத்தை பயன் படுத்தியிருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்தனர். அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்திருந்தது “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடாது. எந்த ஒரு கட்சியின் கொடிக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்குவதோ, அங்கீகாரம் வழங்குவது இல்லை. குறிப்பாக கட்சி கொடிகளில் இடம் பெறும் சின்னங்களுக்கு கூட தேர்தல் ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது. என பதில் கடிதம் அனுப்பியிருந்தது..
வருகின்ற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே தங்களுடைய இலக்கு என்ற நோக்கில் தவெக செயல்பட்டு கொண்டு இருக்கிறது., முதலாவதாக மாநில அளவிலான மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது., அதே சமயம் தவெகவிற்கு பல்வேறு நெருக்கடிகளும் வந்து கொண்டு இருக்கிறது.. என்பது குறிப்பிடத்தக்கது..
மாநாட்டிற்கான பூமி பூஜை கடந்த அக்டோபர் 4ம் தேதி காலை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமையில் நடைபெற்றது., அதனை தொடர்ந்து பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது மாநாடு குறித்தும் அதன் ஏற்பாடுகள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளது..
அதாவது இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் மாநாடு நடத்திடாத அளவிற்கு தவெக மாநாட்டில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..
இலட்சக்கணக்கானோர் மாநாட்டிற்கு வருகை தர இருப்பதால் அவர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாநாட்டில் யாரவது தொலைந்து விட்டாலோ அல்லது உடமைகளை தொலைத்து விட்டாலோ மீட்டு தருவதற்காக “மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள்” அமைக்கப்பட்டுள்ளது..
அதேபோல் மாநாட்டிற்கு வருகை தருபவர்களின் வாகனங்களை நிறுத்தும் விதமாக நான்கு பார்க்கிங் பகுதிகள் அமைக்கப்படவுள்ளது.. 100 க்கும் மேற்பட்ட கழிப்பறை வசதிகள்., இருக்கை வசதிகள் மற்றும் அதற்கு அருகிலேயே குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
அதேபோல் மாநாட்டில் பங்கேற்போருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டால்., அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் விதமாக 150க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.., அதேபோல் ஆம்புலன்ஸ் சேவைகள் ஏற்படும் செய்து தரப்பட்டுள்ளது.. அவர்களை அடையாளம் காண்பதற்காக ஒரே சீருடையும் கொடுக்கப்பட்டுள்ளது..
மற்றும் மாநாட்டில் பங்கேற்போருக்கு ஏதுவாக இருக்கும் வகையில் 5 நுழைவு வாயில்களும்., 15 வெளியேறும் (EXIT) பாதைகளும் அமைத்துதரப்பட்டுள்ளது.. மேலும் 27ம் தேதி தொண்டர்கள் பங்கேற்றால் போதும்.., முந்தைய தினத்தில் இருந்து அங்கு யாரும் காத்திருக்க வேண்டாம் என அக்கட்சி தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..