ட்விட்டேர் நிறுவனத்தில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டதால் அந்த நிறுவனத்தில் பழைய உணவுகள் மற்றும் கழிவறைகள் முறையாக தூய்மை செய்யாமல் இருக்கிறது மேலும் அந்த நிறுவனத்தின் ஊளியர்களை வீட்டிலிருந்தே டாய்லெட் பேப்பரை எடுத்து வர வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.
உலக பணக்காரரான எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை ஒரு பெரிய தொகைக்கு வாங்கினர். அவர நிறுவனத்தை வாங்கிய முதல் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேர்கொண்டு வருகிறார். முதலில் ட்விட்டரின் சிஇஓ வை நீக்கிய அவர் அங்கு பணி செய்த பலரையும் பணி நீக்கம் செய்தார். மேலும் ட்விட்டரில் வேலை சேயும் மீதி ஊளியர்களுக்கு வீட்டு பாடம் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்தார். அதனை தொடர்ந்து ட்விட்டரில் வேலை செய்யும் நேரத்தையும் அதிகரித்து உத்தரவிட்டார். இதனால் பல ஊளியர்கள் அந்த நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்து வெளியேறினர். அதன் பிறகு ட்விட்டேர் அக்கௌன்ட் ப்ளூ டிக் பெற கட்டணம் வசூலித்து வருகிறார்.
இவரது இந்த செயல்களுக்கு பல தரப்பு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தாலும் அவர் அதையே தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணி செய்து வந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளதால் அந்த அலுவலகமே தூய்மையற்ற நிலையில் இருக்கிறது. மேலும் ட்விட்டரில் பனி செய்யும் ஊழியர்களை அவர்களது வீட்டிலிருந்தே டாய்லட் பேப்பரை எடுத்த வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.