தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக்கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.
ஷெர்லின் ஷோப்ரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் நெருங்கி செல்பி எடுத்தும் மகிழ்விக்கிறார். சமீபத்தில் ரசிகர் ஒருவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்வீர்களா? என கேட்டார். இந்த கேள்விக்கு ஷெர்லின் சாதகமாக பதிலளித்து ஒரு நிபந்தனையை வைத்தார்.
அவர் தெரிவித்தது:
ஏன், திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு எனது பெயரை மாற்றிக்கொள்ள மாட்டேன் என கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளார்.
https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/sherlyn-chopra-response-to-marrying-rahul-gandhi-but-on-one-condition-video-goes-viral-1025766

















