சர்ச்சை ட்வீட்…!! பாஜாக எச்.ராஜா வழக்கு…!! நீதிபதி உத்தரவு…!!
இரண்டு அவதூறு வழக்குகளில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனையை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈ.வெ.ரா சிலையை உடைப்பேன் என்று ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவு செய்தது தொடர்பாகவும் திமுக எம்.பி கனிமொழிக்கு எதிராக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையத்தில் திமுக காங்கிரஸ் சார்பில். அளித்த புகாரில் எச்.ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு இந்த இரண்டு வழக்குகளிலும் நீதிபதி ஜெயவேல் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், ‘எச்.ராஜா மீதான புகார் காவல்துரையினர் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் எச். ராஜா இரண்டு வழக்கிலும் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்
மேலும், எச்.ராஜாவுக்கு, இரண்டு வழக்கிலும் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டநிலையில் தற்போது அது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..