திமுகவை காப்பி அடித்த பாஜக..!! வாக்குறுதியில் சொதப்பல்..!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக பாஜக சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது. வருகிற 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் எண்ணிக்கையின் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.
அங்கு மொத்தம் 230 தொகுதிகள் உள்ளது, அந்த 230 தொகுதிகளில் 116 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை பிடிக்க முடியும். இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பெரும் போட்டி நிழவி வருகிறது.
பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக பாஜக சில தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் லட்லி பாக்னா மற்றும் பிஎம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் சிலிண்டர் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
விவசாயிகள் நலன்கருதி அரசு சார்பில் கோதுமை குவிண்டாலுக்கு ரூபாய் 2,700க்கு கொள்முதல் செய்யப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3,100க்கு அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும்.
ஏழை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி, ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 12ம் வகுப்பு வரை கல்வி இலவசம், புதிய மருத்துவகல்லூரிகள் அமைத்து தரப்படும்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்..
பழங்குடியின மக்களுக்கு 3கோடி ரூபாய் செலவில்.., புது பயன் பெரும் திட்டங்கள்.
வீடு இல்லா மக்களுக்கு புது வீடு வழங்கும் திட்டம், போன்ற அறிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மக்களிடம் ஆலோசனை கேட்டும் சில திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும்.., வருகிற தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..