டிக்-டாக், யூ-டியூப் மூலமாக பிரபலமான ஜிபி முத்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அங்கு தாக்கு பிடிக்க முடியாமல் சில நாட்களிலே பிக்பாஸ் வீட்டை விட்டு தாமாகவே வெளியேறினார்.
அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் மற்றொரு பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3-யில் கோமாளிகளில் ஒருவராக பங்கேற்று அனைவரையும் சிரிக்கவைத்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த புகைப்படத்தை பார்த்து பதறி போன ரசிகர்கள் திடீரென ஜிபி முத்துவுக்கு என்னாச்சு என கேட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் அவர் விரைவில் நலம்பெற வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.