“மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute..” முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு..!!
இன்று தீபாவளி உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது., இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பல படங்கள் திரையில் வெளியிடப்பட்டுள்ளது..
முக்கியமாக தமிழ் மொழியில் எடுக்கப்பட்டுள்ள அமரன் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது..
இப்படத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் படத்தை பார்த்து சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்..
நண்பர் கலைஞானி கமலஹாசன்., அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, அமரன் திரைப்படம் பார்த்தேன்.
புத்தகங்களைப் போல் – திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது..!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார்.
மேஜர் முகுந்த் வரதராஜன் – திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன்., சாய்பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்..!
நாட்டை பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் – நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute…!! என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..