பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி நிஷாவுக்கு எளிமையாக வலைகாப்பு நடந்துள்ளது.
ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் கணேஷ். இந்நிகழ்ச்சியில் நேர்மையின் சிகரமாக இருந்த அவர், இறுதிப்போட்டி வரை முன்னேறினார். பைனலில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட கணேஷ் வெங்கட்ராமனுக்கு மூன்றாம் இடமே கிடைத்தது. அந்நிகழ்ச்சி மூலம் அவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.
நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான நிஷாவை கடந்த 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார். இந்நிலையில் நிஷாவிற்கு வளைகாப்பு நடைப்பெற்றது. அதற்கான போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.