ஒரே ஒரு ட்விஸ்ட்டை மட்டுமே வைத்து ஆயிரக்கணக்கான எபிசோட்களை கடந்த சீரியல் “பாரதி கண்ணம்மா”. விஜய் தொலைக்காட்சியில் இந்த சீரியலுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரின் சீசன் 1-யில் நடித்த மூத்த நடிகை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சரவணன்-மீனாட்சி, பாரதி கண்ணம்மா போன்று பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி. 70 வயதாகும் இவர் இன்று காலை தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயலட்சுமி கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்த விஜயலட்சுமிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விஜயலட்சுமி, இரவு உறக்கச் சென்ற நிலையில் உறக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ளது.
விஜயலட்சுமியின் மறைவு சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post