பூவுலகில் புரட்சி கலைஞனின் புன்னகை மறைந்தது…
விஜயகாந்த் என கேட்டாலே உங்களுக்கு என்ன நினைவில் வருகிறது என கேட்டபோது மக்கள் கூறியது, ’நல்ல மனசுகாரர், தைரியமான மாமனிதன், தப்புனு பட்டா உடனே தட்டி கேப்பாரு, கருப்பு எம்.ஜி.ஆர், கேப்டன், புரட்சிக் கலைஞர், முன்னாள் நடிகர் சங்கத் தலைவர், தேமுதிக தலைவர், மாண்புமிகு முன்னாள் எதிர்கட்சித் தலைவர் என தங்களது மனதில் தோன்றியதை பலரும் பலவிதத்தில் கூறினர்.

ஆனால் விஜயகாந்த் விஜயகாந்த்தாக மாறுவதற்கு முன்னால் அவரது பெயர் விஜயராஜ்.
இலங்கையில் ஈழப்போர் நடந்தேரியபோது விஜயகாந்த் தனது ரசிகர் படையுடன் தமிழ்நாடு முழுவதும் இருந்த வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது இருந்த நன்மதிப்பினால் தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்தார்.
எங்கே யாருக்கு பிரச்சனை என்றாலும் உடனே ஓடிச்சென்று நியாயத்தின் பக்கம் நிற்பது, என விஜயகாந்த் சினிமாவைக் தவிர்த்து மக்களின் மனதிலும் நற்பெயருடன் இருப்பதற்கு காரணம் தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்த்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருந்த ரசிகர்கள்தான்.
1996இல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு திரையுலக பொன்விழா நடத்த அன்றைய முன்னணி நடிகர்கள் பலரும் பின் வாங்கிய நிலையில், கேப்டன் விஜயகாந்த பொன்விழாவை நடத்திக் காட்டினார்.
கடனில் மூழ்கி இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று மீட்டார்.
தற்போது வரை தமிழ்நாட்டில் விஜயகாந்த்தினால் பயன் பெற்ற குடும்பங்களில் ஊருக்கு ஒரு குடும்பமாவது இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Vijayakanth-6.jpg)

















