அஜித்துடன் போட்டி போடும் அழகான குட்டீஸ்..!
துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் என்ன என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருந்த போது.., அஜித்தின் 62 ஆவது படத்தை மகிழ்திருமேனி இயக்க போவதாக ஒரு தகவல் வெளியானது.
படத்திற்கு விடா முயற்சி என பெயர் வைத்த பின்னும்.., பட பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருப்பது ரசிகர்களுக்கு வேதனை அளிதுள்ளது. அதற்கு முக்கிய காரணம் அமலாக்க துறையினர் “லைகா நிறுவனம்” மீது நடத்திய சோதனை தான்.
படம் குறித்து 8 மாதங்களாக எந்த வித அப்டேட்டும் கிடைக்காததால் படபிடிப்பை நிறுத்தி விட படுமோ என நினைத்தபோது.., லைகா நிறுவன தயாரிப்பாளர் லைகா சுரேஷ் விரைவில் விடாமுயற்சி படம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங் செல்லும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே ரசிகர்கள் அதை வைரலாக்கி விட மற்ற ரசிகர்களுக்கு குஷியாக இருந்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..