நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிறது ‘பீஸ்ட்’ திரைப்படம். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் மார்ச் மாதம் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தில் இடம் பெறும் ஜாலியோ ஜிம்கான்னா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தது.
இந்நிலையில், பீஸ்ட் படம் 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் போஸ்டரை டிரெண்டாக்கி வருகிறார்கள்.