கடலில் குளித்தால் உயிருக்கு ஆபத்து..!! மீனவர்கள் அதிர்ச்சி பதிவு..!!
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது… தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் கனமழை வலுவடைந்துள்ளது. எனவே தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது..
இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை போன்ற கடற்கரைக்கு பொழுது போக்கை கழிக்க சென்றவர்கள் கடலில் ஒரு அதிசயத்தை கண்டு மகிழ்ந்தனர். யாரும் எதிர்பாரத விதத்தில் கடல் அலையில் பல வண்ணங்கள் காணப்பட்டது.
இதுகுறித்து பாலவாக்கம் மீனவர்களிடம் கேட்டபோது இது ஒரு வகையான கடல்பாசி, இதன் பெயர் ஜல்லி என கூறினர். இதுபோன்று கடல் அலையில் கடல்பாசி தோன்றும்போது கடலில் குளிக்ககூடாது எனவும், இதை அறியாமல் குளித்தால் குளிப்வர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.