தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு கடைகள் வைப்பது குறித்தும் , தீயணைப்பு துறை விதிமுறைகள் குறித்தும் ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல் அரசின் சில அறிவிப்புகள் வெளிவந்துள்ளது அதில் பட்டாசு கடைகள் வைக்கும் இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். கடைக்குள் செல்லவும், வெளியேறவும் இரு புறங்களிலும் வழி கட்டாயம் இருக்க வேண்டும்.
கட்டிடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். உரிமம் கேட்பவர்கள் தீயணைப்பு, உள்ளாட்சி, காவல் துறையிடம் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம்.
அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபம், அரங்குகளில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி இல்லை. உதிரி பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. அலங்கார மின் விளக்குகளை தொங்க விடக்கூடாது. 2 தீயணைப்பு கருவிகள், 2 லாரிகளில் தண்ணீர், மணலை தயாராக வைத்திருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.