பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ( Bajaj Chetak 3503 Electric Scooter ) மாடலில் புதிய வேரியண்ட் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது.
ஏற்கனவே விற்பனையில் இருந்த மற்ற வேரியண்டுகளைக் காட்டிலும் ரூ. 20 ஆயிரம் குறைவான விலையே இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருக்கும் பஜாஜ் நிறுவனம், சென்ற ஆண்டின் இறுதியில் பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் புதிய ’35’ சீரிஸை புதிதாக அறிமுகப்படுத்தியது.
மூன்று விதமான வேரியண்டுகளில் அது அறிமுகம் செய்யப்பட்டது. சேட்டக் 3501, சேட்டக் 3502 மற்றும் சேட்டக் 3503 ஆகியவையே அவை ஆகும். இதில் முதல் இரண்டு வேரியண்டுகளின் விலையையும் 2024 டிசம்பரில் அரங்கேறிய அறிமுக நிகழ்வின்போதே பஜாஜ் நிறுவனம் அறிவித்துவிட்டது. ஆனால், 3503 வேரியண்டின் விலையை மட்டும் அது அறிவிக்கவில்லை.
இதன் விலையை இப்போது அறிவித்து அதை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது பஜாஜ் ஆட்டோ. சேட்டக் 3503 வேரியண்டிற்கு ரூ. 1.10 லட்சம் விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. Bajaj Chetak 3503 Electric Scooter
இது சேட்டக் 3501 வேரியண்டைக் காட்டிலும் ரூ. 20 ஆயிரம் குறைவாகும். மேலும், இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சற்றே விலை குறைவானதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருந்தாலும், அதில் சிறப்பம்சங்களை பஜாஜ் நிறுவனம் வாரி வழங்க தவறவில்லை. அந்தவகையில், வண்ண எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ப்ளூடூத் தொழில்நுட்பமும் இந்த திரையில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமல்ல, செல்போனுக்கு வரும் அழைப்புகளையும் இந்த திரை வாயிலாக அறிந்துகொள்ள முடியும். இத்துடன், ஹில் ஹோல்டு அசிஸ்ட், மியூசிக் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் வழங்கபட்டு இருக்கின்றது என்பது கவனிக்கதக்கது. Bajaj Chetak 3503 Electric Scooter
ரைடிங் மோட்களைப் பொருத்த வரை ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கதக்கது. ஆனால், முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக், டச் ஸ்கிரீன் போன்ற வசதிகள் இந்த ஸ்கூட்டரில் இடம்பெறவில்லை. விலையை குறைவாக வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த அம்சங்களை பஜாஜ் நிறுவனம் நீக்கி இருக்கிறது. Bajaj Chetak 3503 Electric Scooter
அதேநேரம் ஓர் முழு சார்ஜில் 150 கி.மீ ரேஞ்சை தரும் பெரிய பேட்டரி பேக்கை சேட்டக் 3503 வேரியண்டில் பஜாஜ் வழங்கி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 3.5 kwh பேட்டரி பேக்கே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ ஆகும்.
தொடர்ந்து, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 35 லிட்டர் அளவில் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இட வசதியையும் பஜாஜ் வழங்கி உள்ளது. இந்த அம்சங்கள் மற்றும் 20 அயிரம் வரை குறைவான விலை ஆகியவை பஜாஜ் சேட்டக் 3503 வேரியண்டிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பை ஏற்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.