மரம் வளர்போம் குறித்து விழிப்புணர்வு… கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி..!
கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தா புரம் பகுதியில் உள்ள புரோஜோன் வணிக வளாகத்தில் இன்று கோ க்ரீன் மாரத்தான் எனும் தொடர் ஓட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
10 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர், மற்றும் ஒரு கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடத்த பட்ட இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மற்றும் திரைப்பட நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்துசெய்தியாளர்களை சந்தித்து பேசிய திரைப்பட நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறும் பொழுது…
தற்போதைய இளைய தலைமுறையினர் அதிக அளவில் டிஜிட்டல் மயமாக்கல் துறையில் தங்களை தொலைத்து வருகின்றனர். குறிப்பாக செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவைகளில் செலவு செய்யும் நேரத்தில் ஒரு விழுக்காடு கூட நேரடியான உடல் சார்ந்த தேவைகளுக்கு செலவிடவோ, இது மாதிரியான மாரத்தான், வாக்கத்தான், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவைகளில் கலந்து கொள்ளுவது இல்லை, இதனை மாற்ற வேண்டும் என்றார்.
மேலும் இயற்கையை பாதுகாக்க யாரும் தற்போது முன் வருவது இல்லை இதனால் அதிக அளவிலான போலியூசன் சார்ந்த பிரச்சனைகளை நம்மை தாண்டி வரும் தலைமுறையினர் சந்திக்க நேரிடும் நிலை உள்ளது.
இந்த சூல்நிலையை நாம் மாற்ற வேண்டும் இதற்கு நாம் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் செய்யும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் இந்த நிகழ்வில் புரோசோன் வணிக வளாக நிர்வாக அதிகாரிகளான விஜய் பாட்டியா, பாபு, பிரிங்ஸ்டன் நாதன், முஷம்மல், சுபத்ராதேவி, மற்றும் விஜிஎம்மருத்துவமனையின் மருத்துவர் சுமன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாரத்தான்போட்டிகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் டி-ஷர்ட், மெடல், சான்றிதழ் மற்றும் காலை உணவுகள் வழங்கபட்டது.
வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பிரிவு வாரியாக ரூபாய் இரண்டு இலட்சம் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்