மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு செலவுகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்களின் வாழ்க்கைத் துணை வழியில் சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உங்களுக்கு தன வரவு இருக்கும். முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் யோகம் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உற்சாகமான நாளாக இருக்கும். பணியிடங்களில் சக ஊழியர்களால் நன்மைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் லாபம் இருக்கும். நெருங்கிய நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சிறப்பான நாளாக இருக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். நேரடி, மறைமுக எதிரிகள் விலகுவார்கள். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி உண்டாகும். பொருள் வரவு இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். புதிய மனிதர்களால் நன்மைகள் ஏற்படும். ஒரு சிலர் குடும்பத்துடன் வழிபாட்டு தலங்களுக்கு செல்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பூர்வீக சொத்து விவகாரங்களில் இழுப்பறி உண்டாகும். பண வரவுகளில் தாமதம் ஏற்படும். வீட்டில் இருப்போரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று கூடுதல் கவனம் தேவை.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இன்றைக்கு குடும்ப உறுப்பினர்களோடு அனுசரித்து செல்வீர்கள். மிகுந்த உற்சாகமாக செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். பொதுவெளியில் உங்கள் செல்வாக்கு உயரும்.தங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் நல்ல செய்தி வந்து சேரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு செய்யும் காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பண விவகாரங்களில் பிரச்சனைகள் உண்டாகும். அலுவலகத்தில் பணி புரிவோர்களுக்கு கூடுதல் பணிச்சுமை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு நெடுநாள் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். வாங்கிய கடன்களை அடைப்பீர்கள். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிறிது இழுபறிக்கு பிறகு வெற்றி கிடைக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நீங்கள் விரும்பியது கிடைக்கும். தூரத்து உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். திடீர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெற்றிகரமான பொருள் வரவு இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். கலை மற்றும் சினிமா தொழில் இருப்பவர்கள் புகழ் பெறுவார்கள். காரியங்களில் துணிந்து ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெண்கள் வழியில் சிலருக்கு பொருள் வரவு ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு நெடுநாள் இருந்து வந்த மனக்குழப்பங்கள் நீங்கும். சுப காரியங்கள் நடைபெறும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.
Discussion about this post