மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மனம் நிம்மதி பெறுவீர்கள். சுப காரியங்கள் விரைவில் நடைபெறும். நெருங்கிய உறவுகளால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும். வீட்டு பெரியவர்களால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரங்களில் சரியான லாபம் இருக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். கலைஞர்கள் செல்வமும், புகழும் பெறுவார்கள். சுப காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். அந்நிய நபர்களால் சிலருக்கு பொருள் வரவு ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நீங்கள் நினைத்தது நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். திடீர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தாராள பொருள் வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் இருந்த எதிரிகள் விலகுவார்கள். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். நீங்கள் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக நடந்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் என்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை அவசியம். சிலர் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். பெண்களால் வீண் செலவுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பணியிடங்களில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஒரு சிலர் முடிவுகளை எடுப்பதில் திணறுவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத பணவரவு இருக்கும். அரசாங்க காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நீங்கள் விரும்பியது நிறைவேறும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். தூரத்து உறவுகளால் நன்மைகள் ஏற்படும். ஒரு சிலர் குடும்பத்துடன் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். சுய தொழில், வியாபாரங்கள் சிறக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சிறப்பான நாளாக இருக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் இழுபறிக்கு பின் வெற்றி கிடைக்கும். போலி நபர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் இருக்கும். பொருள் வரவு திருப்திகரமானதாக இருக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கவலைகள் தீரும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளால் நன்மைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மனக்கவலை ஏற்படும். எடுத்த காரியங்களில் இழுபறி உண்டாகும். தொழில், வியாபாரங்களில் சராசரியான கடும் போட்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். சொத்து பிரச்சனைகளில் முடிவுகள் ஏற்படாது.
Discussion about this post