வெளியே செல்வோர் கவனத்திற்கு..!! தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இப்படி தான் இருக்குமா..!!
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு காற்று குறைந்ததன் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது..
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
மேலும் தமிழகத்தில் சில இடங்களில் இரண்டு முதல் மூன்று செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேற்கு வங்காள பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகத்தான் தமிழகத்தில் வறண்ட வானிலை ஏற்படுகிறது.. என வெப்பநிலை உயர்வதற்கான காரணத்தை வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..