தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கவனத்திற்க்கு..!!
குழந்தை பெற்ற பின் தாய்மார்கள் அனைவரும் அவர்களின் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுக்க தொடங்கி விடுவார்கள். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் சில நன்மைகள் உண்டு. அதை பற்றி பார்க்கலாம்.
* தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு, கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களில் இருந்து மீள்வதற்கு உதவும். குழந்தை பெற்ற வலியை குணமாக்கி விடும்.
* கர்ப்பகாலத்தில் கருப்பையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும், குழந்தை பெற்ற பின் அந்த கருப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்கு, தாய்ப்பால் உதவும்.
* தாய்ப்பால் கொடுப்பதால், பிரசவகாலத்தில் ஏற்படும் ரத்த இழப்பை சரி செய்து, அது சம்மந்தமான நோயில் இருந்து காக்க உதவுகிறது.
* தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தில் இருந்து பாதுகாக்கிறது.
* தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும், தாய்க்குமான நெருக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது.
* தாய்ப்பாலில் இருக்கும் ஆரோக்கியம் வேறு எதிலும் இல்லை என்பதால், குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அதே அளவிற்கு தாயின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கச் செய்கிறது.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post