கவுகாத்தி செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் வடமாநிலத்தவர்கள் டிக்கெட் எடுக்க்குள் அமர்ந்து முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தராமல் அடாவடி செய்தனர். முன்பதிவு செய்தவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அனுமதியின்றி பயணித்த வடமாநிலத்தவர்களை கீழே இறங்கிவிட்டனர்.
ரயில்களில் வடமாநிலத்தை சேர்ந்த பயணிகள் முறையாக டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் ஏறி பயணம் செய்வது வழக்கமாகி வருகிறது. இதே போன்ற நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது கவுகாத்தி செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் கூட எடுக்காமல் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் வாடா மாநில பயணிகள் பயணித்து வந்தனர். அப்போது முன்பதிவு செய்த பயணிகள் முறையிட்டும் அவர்களின் இடத்தை தர மறுத்து டவடி செயலில் ஈடுபட்டனர்.
இதனால் பொறுமையை இழந்த பயணிகள் காவல் துறையில் புகைரளித்தனர். இதனால் அந்த ரயில் திருவொற்றியூரில் நிறுத்தபட்டது அதனை தொடர்ந்து முறையான பயணசீட்டு இல்லாத பயணிகள் சுமார் 1000 பேரை கீழே இறங்கிவிட்டனர். மேலும் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்பதிவு செய்த் பயணிகள் கோரிக்கை வைத்தனர்.