ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை..! கொலைக்கான நோக்கம்..?
ஈரான் தலைநகரான டெஹ்ரானில் ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹமாஸில் இருந்து ஈரானுக்கு சென்று கொண்டிருந்த இஸ்மாயில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த சில வருடங்களாக போர் நீடித்து வருகிறது. அந்த போரில் இதுவரை 39 ஆயிரத்து 258 பேர் உயிரிழந்துள்ளனர்.,
மேலும் 90 ஆயிரத்து 589க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதல் இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக பாலஸ்தீன போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தரப்பில் இருந்து 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்மாயில் ஹனியே கடந்த 2017 முதல் ஹமாஸின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார்.
ஈரானின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார் இஸ்மாயில் ஹனியே. தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியது. அதில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர் என 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஹனியே படுகொலைக்கு யார் காரணம் என்பது குறித்த தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.