பிரபல தமிழ் நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் நடிகையும் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனை காதலித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நெல்லையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
Discussion about this post