வேலூரில் காவல்துறை உதவி ஆய்வாளர் களுக்கான எழுத்து தேர்வு பல விதிமுறைகளுடன் நடைபெற்றதால்..?
வேலூர் காட்பாடியில் காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கான எழுத்து தேர்வில் 7613 பேர் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தேர்வை எழுதுகின்றனர். காவல்துறை வேலூர் சரக துணை தலைவர் முத்துசாமி தலைமையில் 900 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.
இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 7613 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வு பணிகளை வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உட்பட 900 பேர் தேர்வு நடைபெறும் பணியை கண்காணித்து வருகின்றனர்.
அத்துடன் கண்காணிப்பு கேமராக்களும்பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது பேனாக்கள் மட்டும் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. செல்போன் மின்னனு பொருட்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. முழு பாதுகாப்புடன் இந்த உதவி ஆய்வாளர் தேர்வு நடைபெறுகிறது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..