மக்களவைத் தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…
மக்களவைத் தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாகவும், நேரடியாக அந்த மாநிலங்களுக்கு சென்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டங்களின்போது, இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாநில சட்டம் – ஒழுங்கு, வாக்குச்சாவடிகள் நிலை போன்றவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
மக்களவை தேர்தல் 2024க்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் 96.88 கோடி பேர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அதில், ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48 ஆயிரத்து 044 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தல் மார்ச் முதல் அல்லது 2-வது வாரத்தில் அறிவிக்கப்படலாம் எனவு தகவல் வெளியாகியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.