அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனுத்தாக்கல்..! உயர்நீதிமன்றம் முடிவு..?
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் வழங்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணமோசடி வழக்கில் வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். சிறையில் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து உச்சநீதிமன்றம் அவரது தரப்பில் ஜாமீன் கோரி விண்ணபித்தனர்.
அதன் பெயரில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடலநலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு. டெல்லி உயர் நீதிமன்றம் 21 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இதற்கிடையே, உடல்நிலையை காரணம் காட்டி ஜூன் 1ம் தேதியுடன் முடிவடையும் இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவல் உச்சநிதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோடைக்கால சிறப்பு அமர்வு மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இது தொடர்பான மனு விசாரணைக்கு வந்த போது மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கமான ஜாமின் கோரி கெஜ்ரிவால் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது..
இந்நிலையில், டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..