கலைஞர் கனவு இல்லம் திட்டம்..! தங்கம் அறிவிப்பு..! யார் யாருக்கு பயன்..?
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணி புரியும்.., தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தர போவதாக நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு :
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாஞ்சோலை BBTC தேயிலை நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகளை செய்து தரவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தங்கம் தென்னரசு :
மேலும் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் அனைத்து அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான அனைத்து உதவிகளும் தமிழக அரசால் செய்யப்படும் என நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
பிரதிநிதிள் கோரிக்கை :
தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மற்றும் பொது நல இயக்கங்களைச் சார்ந்த பிரதிநிதிள் கோரிக்கைகளின் அடிப்படையில் பணியிழந்த தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டாவுடன் கூடிய புதிய வீடுகள், வாழ்வாதாரத்திற்கான உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்க இருப்பதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..