திருப்பத்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவின் கடன் மேளா தொடக்கம்..!! ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு..!
திருப்பத்தூரில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கடன் மேளா சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு..
திருப்பத்தூர் மாவட்டம், ஆசிரியர் நகர் தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி கடன் மேளா நடைப்பெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்தியா, மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கலந்துக்கொண்ட திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்.
அண்ணாதுரை பேசுகையில் திராவிட மாடல் ஆட்சியில் அனைவருக்கும் அனைத்து கிடைக்கும். என்றார். மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கான உரிமை தொகை திட்டம், இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டத்தை முதல்வர் துவங்கி வைத்துள்ளார்.
கல்லூரி மாணவிகளுக்கு உதவி தொகை, பெண்கள் மணிக்கு செல்ல இலவச பேருந்து பயணம், நமது காலை சிற்றுன்டி திட்டத்தை பார்த்து அமெரிக்கா இந்த திட்டத்தை துவங்கி உள்ளது. தமிழ்நாடு இந்திய அளவில் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த கடன் மேளா வில் கூட்டுறவு வங்கிகளின் மூலமாக மகளிர் குழுக்களுக்கான கடன், பயிர் கறவை மாட்டு கடன் மகளிர் சுய உதவி குழுக்கடன் நகை கடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு வணிக கடன் தாம்பூ கடன் வாங்கிக்கோ கடன் எந்த கடன்கள் என 3.24 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டது.
இந்த கடன் மேலாவில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் விவசாயிகள், என திரளாக பங்கேற்றனர்