கோவை சரவணம்பட்டி பகுதி தனியார் பள்ளியில் ஆண்டு விழா
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பி.பி.ஜி கல்வி குழுமங்களின் தலைவர் தங்கவேலு, அஸ்வின் மருத்துவமனையின் இயக்குனர் அஸ்வின், கல்லூரியின் இயக்குனர் அக்ஷய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட, மாநில, சர்வதேச அளவில் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோவை மேற்குமண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி கோப்பைகளை வழங்கி கவுரவித்தார்.
இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சியை அனைவரும் கண்டு ரசித்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.