ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. விசாரணைக்கு ஒத்துழைக்காத ரவுடி நாகேந்திரன்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.., அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..
இந்த கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பென்னை பாலு உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.அதன் பின் 8 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..
அப்போது குற்றவாளி அருள் கொடுத்த தகவலின் படி.., காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மாநில முதன்மை செயலாளர் அஸ்வத்தமானை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்..
மேலும் ஏற்கனவே ஆயுள் கைதியாக சிறையில் உள்ள அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரனையும் நீதிமன்ற காவலில் போலீசார் எடுத்தனர். மகன் அஸ்வத்தாமனிடமும் தந்தை நாகேந்திரனிடமும் காவல்துறையினர் மூன்று நாட்கள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் காவல்துறைக்கு தேவையான தகவல்களை அஸ்வத்தாமன் வழங்கினார். ஆனால் ரவுடி நாகேந்திரன் காவல்துறையினருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவில்லை.
எப்போது கேட்டாலும் எனக்கு எதுவும் தெரியாது, எனக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே நாகேந்திரன் கூறுகிறாராம். அது போல் போலீஸார் 3 நாள் விசாரணை முடிவில் தயார் செய்திருந்த அறிக்கையிலும் கையெழுத்திட நாகேந்திரன் மறுத்துவிட்டாராம்.
-பவானி கார்த்திக்