ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…!! முக்கிய குற்றவாளியிடம் விசாரணை…!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவரை இன்று விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் அவரது வீட்டின் முன் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யபட்டார்., அந்த வழக்கில் பெண்ணை பாலு உட்பட 27 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து அதில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுடப்பட்டனர்..
தற்போது இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உட்பட பத்து பேரை காவலர்கள் கைது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்., அதில் சம்மந்தப்பட்டுள்ள 10 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது., அதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்தனர்..
இதுவரை கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, ஹரிகரன், சதீஷ்குமார், ஹரிஹரன் சிவா, பிரதீப், முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முகிலன், விஜயகுமார் என்கிற விஜய், விக்னேஷ் என்கிற அப்பு, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும் பிரபல தாதா நாகேந்திரன் மகனுமான அஸ்வத்தாமன், ராஜேஷ், செந்தில்குமார் மற்றும் கோபி ஆகிய 15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களை சிறையில் அடைக்கவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்தார்…
இதுவரை 10 பேர் இக்கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 25 பேர் மீது குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இன்னும் சில நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் 25 பேர் மீது குண்டாஸ் தடுப்பு சட்டம் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது..
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த செப்டம்பர் 3ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். அவரது கொலைக்கான நோக்கம் குறித்து அந்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.,
அதாவது அரசியலிலும், சமூகத்திலும் மக்கள் முன் நல்ல செல்வாக்காகவும் ஆட்கள் பலத்தோடும் இருந்ததால் அவரை வீழ்த்தி அந்த இடத்திற்கு வர இந்த கொலை நடந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள சுரேஷ் கிருஷ்ணா விசாரணைக்கு அழைத்த போது நேரில் ஆஜராகததால்., லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டது. இந்நிலையிலே அவரை விமான நிலையத்தில் வைத்து சுரேஷ் கிருஷ்ணா விடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..