இனி ஹாஸ்பிட்டல் போறதா..? வேண்டாமா..? குழப்பத்தில் இருக்கும் முக்கிய மாவட்டம்..?
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மூன்றாவது தார்வழி பகுதியில் பெண் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவ படிப்பு படிக்காமல் கிளினிக் வைத்து பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் யோகேஸ்வரனுக்கு புகார் அளித்ததின் பேரில் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ரகுபதி மனைவி ரஜினிகாந்தி (42) என்பவர் ஹோமியோபதி பட்டப் படிப்பு படித்து வந்த நிலையில் பாதியில் படிப்பு நிறுத்திவிட்ட அவர் மருத்துவ பட்டப்படிப்பு முடிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. பின்னர் அவரிடம் இருந்த மருந்துகள் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு மருத்துவ அலுவலர் யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..