இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் ஏ.ஆர்.ரகுமான் மகள்..!!
இசை திரை உலகிற்கே ஜாம்பவனாக இருப்பவர் “ஏ.ஆர்.ரகுமான்” தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இசை அமைத்தவர். இவரின் இசைக்கும், பாடலுக்கும் மயங்காத உள்ளங்களே கிடையாது..
ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.. ஆனால் ஒரு சிலர் இளையாராஜா அளவிற்கு எல்லாம் அவருக்கு இசை அமைக்க தெரியாது.
ஒரு பாடல் எழுதுவதற்கும் அதற்கு இசை அமைப்பதற்கும் அதிக நேரம் எடுக்கிறார். இவர் எல்லாம் எங்கிருந்து சிறந்த இசையை கொடுக்க போகிறார், என்று ஆரம்பத்தில் இவரை விமர்சனம் செய்தவர்களே கிடையாது.
ஆனால் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்திற்கு இசை அமைத்து இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார்.. இதன் மூலம் அவருக்கு இரண்டு தேசிய விருது கிடைத்தது. அந்த ஆஸ்கர் விருதை வாங்கியதும் “எல்லாம் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். அதன் பின் அவரை தேடி வந்து பல இயக்குனர்கள், அவர்களின் படத்திற்கு இசையமைப்பாளராக தேர்வு செய்தனர்.
அவர்களை போலவே அவரின் வாரிசுகளும், தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு வருகின்றனர். மகன் ஏ.ஆர். அமீன் பாடகராக இருக்கும் நிலையில்.
தற்போது மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். சில்லு கருப்பட்டி மற்றும் ஏலே படத்தின் இயக்குனர் ஹலிதா ஹமி தயாரிக்கும் மின்மினி படத்துக்கு கதீஜா இசை அமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார்.
இவரின் முதல் இசை வெற்றி சாதனையாக பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.