சென்னை உயர்நீதி மன்றத்தின் புதிய நீதிபதி நியமனம்..!
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மூத்த நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி. கங்காபூர்வாலா, மே 23ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

இதையடுத்து, புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.