திருப்பூரில் மீண்டும் ஒரு வேதனை சம்பவம்..!! 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவிலில் கடந்த மூன்று நாட்களாக வீரகுமாரசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவில் பாட்டு கச்சேரி கேட்டிருந்த ( ரம்யா – பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ) 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திவிட்டதாக 6 நபர்களை பிடித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலனூர் பகுதியைச் சேர்ந்த பெண் கணவரை பிரிந்து விவசாயம் செய்து கொண்டு வருவதாகவும் அவருடைய மகள் 17 வயது மகள் ரம்யா தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார்.
இந்நிலையில் வெள்ளகோவில் தேர் திருவிழாவிற்கு இரண்டாம் நாள் 9ஆம் தேதி இரவு பாட்டுக் கச்சேரி நடந்துள்ளது அதில் முன்வரிசையில் அமர்ந்து கொண்டு பாட்டுக்கச்சேரியை கேட்டுக் கொண்டிருந்த ரம்யா காணவில்லை என பதறியடித்த தாய் பல்வேறு பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர் 10ம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் மகள் வீட்டிற்கு வரவே அதுகுறித்து காரணம் கேட்டுள்ளார். அப்போது நெஞ்சை உலுக்கும் செய்தியை ரம்யா கூறியுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் தன்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத காட்டிற்குள் ஒரு அறையில் வைத்து இருவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அங்கிருந்து ஒருவர் மட்டும் தன்னை ஸ்கூட்டில் அழைத்து கொண்டு சென்றபோது எதிரில் வந்த இரண்டு பேர் சிறுமியை பைக்கில் ஏற்றிக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு,
பின் காரில் வந்த நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு காரில் அழைத்து வந்து கோவில் முன் பகுதியில் இறக்கிவிட்டு போனதாக சிறுமி தாயிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் பின்னர் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் நேற்று இரவு 2 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் இன்று மாலை மீண்டும் 4 பேரை பிடித்து வெள்ளகோவில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..