அங்காடி தெரு நடிகை சிந்துவின் கடைசி பேட்டி..!! மனதை வருடும் வார்த்தைகள் ..!!
அங்காடி தெரு படம் சில சாமானிய மனிதர்களின் கதையை வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம். முக்கியமாக துணி கடைகளில் வேலை பார்க்கும் மனிதர்களின் நிலைமையையும், தெரு ஒர வியாபாரிகளின் நிலைமையும் எடுத்த சொன்ன ஒரு திரைப்படம்.
அதில் நடித்த அனைத்து காதாபாத்திரங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கும்.., அப்படி இடம் பிடித்தவர் தான் நடிகை “சிந்து” உள்ளாடை விற்பனையாளரின் மனைவியாக நடித்தது மட்டுமின்றி.., உள்ளாடை விற்றாலும் நான் இப்பொழுது மானத்துடன் வாழ்கிறேன் என அவர் சொன்ன வசனம் பலரையும் கவர்ந்தது.
ஆனால் நேற்று அவரின் திடீர் இழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அங்காடி தெரு’ படத்தில் நடித்த, மறைந்த நடிகை சிந்து, இதற்கு முன் அளித்திருந்த ஒரு பேட்டியில் அவர் கூறியது.
“துக்க வீடு என்றால் முதல் ஆளாக போய் நிற்பேன் போலிஸ் ஸ்டேசன் பிரச்சனையாக இருந்தாலும் நான் இருப்பேன். இரவு 2 மணிக்கு பிரச்சினை என்று கூப்பிடாடாலும் ஓடிப்போய் அவர்களுக்காக நிற்பேன். எத்தனையோ பேருக்கு நான் உதவிகள் செய்திருக்கேன்.என்னிடம் உதவி பெற்றவர்கள் பலர்.
ஆனால் நான் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டவுடன்,யாரும் உதவவில்லை ஆறுதல் சொல்ல கூட வரவில்லை. நான் செய்த பேரும் தவறு.., எல்லோருக்காகவும் வாழ்ந்த நான் எனக்காக வாழவே இல்லை..
Discussion about this post