பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்..! ராமதாஸ் அதிரடி உத்தரவு…!!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டும் இளைஞர்களை வழி நடத்தவும் பாமகவின் தலைவராக இன்று முதல் தான் செயல்படுவதாகவும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக செயல்படுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார்
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் ராமதாஸ் வேளாண் துறை வளர்ச்சியை அதிகரிக்க தமிழக அரசு வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் 60 விழுக்காடு மக்கள் வேளாண்மையை நம்பி உள்ளதால் வேளாண் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் கடந்த ஆண்டு 9.6 விழுக்காடு வேளாண் துறை வளர்ச்சி அடைந்துள்ளதாகவும்,வேளாண் பொருளாதாரத்தினை முன்னேற்ற ஆண்டுக்கு 4 விழுக்காடு வளர்ச்சி பெற்றால் தான் வேளாண்மை வளர்ச்சி பெறும் நெல்லுக்கான குவிண்டால் விலையை 3500 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இடிந்து விழும் பள்ளிகளின் மேற்கூரை பூச்சிகளை சீரமைக்க பத்தாயிரம் நிதி ஒதுகீடு செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக ஒளிபரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாட்டில் தொடர் வண்டி திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கூறினார்.
வன்னியர் சங்கம் 1980ல் தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு பணிகளை செய்து வரும் தான் சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கு சென்றதில்லை பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை மக்கள் மனதில் இடம்பெற்றுள்ள நான் இன்று முதல் பாமக நிறுவனர் என்ற முறையில் பட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பினை தானே எடுத்துகொள்ளதாகவும் பாமகவின் தலைவராக செயல்படுவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பாமகவின் தலைவராக செயல்பட்டு வந்த அன்புமணி ராமதாஸ் இன்று முதல் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டும் இளைஞர்களை வழி நடத்த இந்த முடிவினை எடுத்துள்ளதாக ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் மே 11 ஆம் தேதி நடைபெறும் வன்னியர் மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக அமையும் என்றும் அனைத்து நிர்வாகிகளும் மாநாடு வெற்றி ஒன்றினைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார். தமிழகத்தில் நீட் தேர்வு என்று ஒன்று இருக்க கூடாது அது ஒழிக்க பட வேண்டும் என்று தெரிவித்தார்.