சிவகாசி அருகே ஊராம் பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது இங்குள்ள 25க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பட்டாசு ரகங்களுக்கு மருந்து செலுத்தும் அறையில் மூலப்பொருள்களில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்துக்குள்ளானது விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது அருகில் இருந்த மற்றொரு அறை சேதம் அடைந்து தரைமட்டமானது அப்போது அங்கு பணியில் இருந்த அய்யம்மாள், இருளாயி, குமரேசன், சுந்தர்ராஜன் ஆகிய நான்கு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் அனைவரும் சிரிச்சிக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ தொழிற்சாலை வளாகத்தை வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர் விபத்து சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post