நொளம்பூரில் அமமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை.. தனிப்படை போலிசார் கொலை கும்பலுக்கு வலை வீச்சு
திருவாரூர் மாவட்டம் கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(48) நொலம்பூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஜே.கே என்ற மீன் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் மீன் கடையில் இருந்த போது மீன் கடைக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஜெகனை உடலில் பல்வேறு இடங்களில் வெட்டி உள்ளனர். அப்போது ஜெகன் ரத்தம் சொட்ட சொட்ட தப்பி ஓடியுள்ளார். இருப்பினும் விடாத பின் தொடர்ந்த மர்ம கும்பல் ஜெகனை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெகன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
பின்னர் இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நொலம்பூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்த ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நொலம்பூர் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் முன்பகை காரணமாக கொலை நடந்ததா.! அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அமமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது..