சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் ஆகையால் அதை மூட வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் கூறி சர்ச்சையானது இந்நிலையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகங்களில் தினமும் ரூ.500 கீழ் தான் வருமானம் வருவதாகவும் அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அதனால் அந்த உணவகங்களை விரைவாக மூட வேண்டும் என்றும் கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது இந்நிலையில் சென்னை மேயர் பிரியா இதற்கு பதிலளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரனின் தகவலை அடுத்து மேயர் பிரியா கூறுகையில், அம்மா உணவகங்கள் தொடங்கிய போது எப்படி செயல்பட்டதோ அதெபோல் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.