ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மாவே கிடையாது..! சுசித்ராவின் பேட்டி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
சமிபகாலமாகவே திரைப்பட பிரபலங்கள் சிலர் தங்களது திருமண வாழ்க்கையிலிருந்து விவாரகத்து பெற்று வருகின்றனர். தமிழ் சினிமாவில் விவகரத்து கலாச்சாரம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நாக சைதன்யா சமந்தா,தனுஷ் ஐஸ்வர்யா முதல் ஜீவி பிரகாஷ் சைந்தவி வரை விவாகரத்து செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த 2022- ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவகரத்து பெற்று தனித்தனியாக இருவரும் வாழ்ந்து வரும் நிலையி்ல் பாடகி சுசித்ராவின் பேட்டி சர்சையாகியுள்ளது.
சுசித்ரா பேட்டியில் கூறியிருப்பது என்னவென்றால் ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மாவே கிடையாது. அவர் எப்போதுமே தன்னை பற்றி மட்டும் தான் யோசிப்பார். இந்த விஷயத்தில் தனுஷுக்கு தான் என்னுடைய ஆதரவு இருக்கிறது.
விவாகரத்துக்கு பிறகு தான் நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்பது போல் அவர் காட்டிக் கொள்கிறார். ஆனால் தனுசுடன் இருக்கும் போது அவருடைய திறமையை யாரும் கட்டுப்படுத்தவில்லயே.
அதேபோல் தனுஷ் பல நடிகைகளுடன் டேட்டிங் செய்ததாக குற்றச்சாட்டு இருக்கிறது. அதே அளவுக்கு ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையில் இருக்கும் போதே டேட்டிங் செய்து இருக்கிறார். என்பது அவர் மனசாட்சிக்கு தெரியும் என்றும் இதன் மூலம் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு தான் இருந்தனர் என சுசித்ரா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஏற்கனவே இருவரும் அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டதாக ஒரு பேச்சு இருந்து வரும் நிலையில் சுசித்ராவின் கருத்தும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் மறுபக்கம் சுசித்ராவை திட்டி தீர்த்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்